தொடர்ந்து மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்!

leave-for-tasmac-shops-for-three-days

ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் அடைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

தெய்வத் திருமகனார் என்றழைக்கப்படும் முத்துராமலிங்கத் தேவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே நாளான அக்டோபர் 30 ஆகும். எனவே தேவர் ஜெயந்தியும் குருபூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன.

முத்துராமலிங்க தேவரின் குருபூஜை ஆண்டுதோறும் அக்டோபர் 28 முதல் 30 வரை 3 நாட்கள் நடைபெறும்.

முதல் நாள் தேவரின் ஆன்மீக விழா, இரண்டாம் நாள் அரசியல் விழா, மூன்றாம் நாள் குரு பூஜை விழா என மூன்று நாள் கொண்டாடப்படும்.

இதையொட்டி ராமநாதபுரத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் சென்று முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்கள். முதல்வர் ஸ்டாலின் இந்த ஆண்டு பசும்பொன் செல்லவுள்ளார்.

இந்தசுழலில் ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகளை மூன்று நாட்கள் மூட ராமநாதபுரம் மாவட்ட அட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

“குருபூஜையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும். கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.