பயோ எரிபொருளால் தயாரான முதல் ராக்கெட்டின் சாதனை பயணம்..

by Logeswari, Feb 2, 2021, 19:30 PM IST

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ப்ளூஷிஃப்ட் எரோஸ்பேஸ், முதல் முறையாக ஜனவரி 31 ஆம் தேதி பயோ எரிபொருள் மூலம் தயாரான ராக்கெட்டை இயக்கி புதிய சாதனையை படைத்துள்ளது. இப்புதிய ராக்கெட்க்கு ஸ்டார்ஸ்ட் 1.0 என்ற பெயரை மிகுந்த பெருமையுடன் சுட்டியுள்ளது. இந்த ராக்கெட் சுமார் 250 கிலோ எடையும் 20 அடி உயரமும் கொண்டது. இதை இராணுவ மையத்தில் இருந்து வானை நோக்கி செலுத்தப்பட்டது. இதில் பயோ எரிபொருள் மூலம் இயங்குவதால் மற்ற ராக்கெட்டை போல நச்சுத்தன்மையை பரப்பாது. அதுமட்டும் இல்லாமல் இது மலிவான பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்டவை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ராக்கெட்டால் அதிகபட்சமாக 8 கிலோ எடையை சுமக்க முடியுமாம். பயோ எரிபொருள் எதிலிருந்து தயாரிக்கப்படுவது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் ஒரு உயிரிலிருந்து பெறப்படுகின்ற எரிபொருள் என்று சொல்லப்பட்டு வருகின்றது. ஸ்டார்டஸ்ட் 1.0 என்பது ஒரு ஒற்றை நிலை முன் மாதிரி. இது வெறும் 18 பவுண்டுகள் பேலோடை சுமந்து செல்லும் மற்றும் சப் ஆர்பிட்டல் இடத்தை அடையக்கூடிய தன்மை இந்த ராக்கெட்க்கு உள்ளது. அந்த பேலோட் எண்ணிக்கை அதிகம் இல்லை என்றாலும் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் அல்லது ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக் போன்றவற்றுடன் போட்டியிட நிறுவனம் திட்டமிடவில்லை.

அதற்கு பதிலாக இது வேறுபட்ட சந்தையை குறிப்பாக கல்வி மற்றும் அராய்ச்சியில் ஈடுப்பட முயல்கிறது. இந்த ராக்கெட் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் ஸ்டார்டஸ்ட் 1.0 ஒரு முன் மாதிரியாக வைத்து கொண்டு ஒரு பெரிய பேலோடை சுமக்கும் திறன் கொண்ட மற்றொரு ஸ்டார்டஸ்ட் 2.0 இல் வேலை செய்கிறது என்று கூறப்படுகிறது. இரண்டு முன் மாதிரிகளும் பெரிய வணிக ராக்கெட்களுக்கு அடித்தளமாக அமையகூடியதாகும்.சில அறிக்கைகளின்படி சிறிய செயற்கைக்கோள் எவுதள சேவைகளுக்கான தொழில் அடுத்த புத்தாண்டுக்களில் 69 பில்லியன் டாலர்களை ஈட்டக்கூடும். அடுத்து ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 40 புதிய திட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

You'r reading பயோ எரிபொருளால் தயாரான முதல் ராக்கெட்டின் சாதனை பயணம்.. Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை