இந்தியாவில் அசத்திய வார்னருக்கு இங்கிலாந்தில் இப்படியொரு கதியா?

David Warner poor play in Ashes Test

by Mari S, Sep 13, 2019, 20:31 PM IST

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 2 போட்டிகளில் வெற்றியையும் ஒரு போட்டியை டிராவும் செய்து முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா வென்றால் கோப்பையை கைப்பற்றும். இங்கிலாந்து வெற்றி பெற்றால், டிராவாகும்.

ஆனால், வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரின் ஆட்டம் குறித்த சுவாரஸ்யமான பேச்சுகள் தான் ஆஷஸ் தொடரை விட அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

கடந்த ஐபிஎல் சீசனில் இந்தியாவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வார்னர், ஆடிய அனைத்து ஆட்டங்களிலும், அரை சதம் கடந்து ஆச்சர்யமூட்டினார். வெறும் 12 போட்டிகள் மட்டுமே விளையாடிய வார்னர் அடித்த 692 ரன்களை இறுதி வரையிலும் எந்த வீரராலும் நெருங்க கூட முடியவில்லை. பின்னர், அதே வேகத்தை உலக கோப்பையிலும் வார்னர் வெளிப்படுத்தி 3 சதம் மற்றும் 3 அரைசதம் என மொத்தம் 647 ரன்களை குவித்தார்.

இப்படி அதிரடி காட்டிய வார்னர், ஆஷஸ் தொடரிலும் அசத்துவார் என எதிர்பார்த்த ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய ஏமற்றமே மிஞ்சியது. முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 2 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். 2வது டெஸ்ட் போட்டியில் 3, 5 என இரண்டு இன்னிங்சிலும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், வார்னர் குறித்த சர்ச்சை கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் எழ, மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் போட்டியில் 61 ரன்கள் எடுத்தார். ஆனால், அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆகி ஆஸி ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஆஷஸ் தொடரில் ஈசியாக ஆஸ்திரேலிய அணி வெல்ல வேண்டிய ஆட்டத்தை வார்னரின் சொதப்பல் ஆட்டம் தாமதப்படுத்துகிறது என ரசிகர்கள் கடுப்பில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் வென்றால் மட்டுமே வார்னரின் இந்த சொதப்பல் ஆட்டம் மக்களிடையே மறக்கடிக்கப்படும்.

You'r reading இந்தியாவில் அசத்திய வார்னருக்கு இங்கிலாந்தில் இப்படியொரு கதியா? Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை