டி20 இல்லாமல் கிரிக்கெட் இல்லை- கங்குலி தீர்க்கம்!

by Rahini A, Feb 24, 2018, 11:05 AM IST

"டி20 இல்லாமல் கிரிக்கெட்டே இல்லை" என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அங்கு கங்குலி பேசுகையில், "கிரிக்கெட்டுக்கு டி20 மிகவும் அவசியமானது. டி20 இல்லாமல் கிரிக்கெட்டே இல்லை. சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணி சிறப்பாகவே விளையாடி வருகிறது. மூன்றாவது போட்டியில் அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றி பெறுவார்கள் என்றே நம்புகிறேன்" என்றார்.

இந்திய அணியில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு குறித்து கேட்ட போது கங்குலி, "அணியில் மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு ஒரு சேவக் போலவும் ஹர்பஜன் போலவும் வளர்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். முக்கியமாக அணியில் தோனியின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. ஒரு நாள் போட்டி மற்றும் டி20 ஆகிய இரண்டிலும் தோனி மிகவும் சிறப்பாகவே விளையாடி வருகிறார். இதே போல் இளம் வீரர்களுக்கும் ஜொலிக்க வாய்ப்பு கிடைக்கும்" என்றார்.

You'r reading டி20 இல்லாமல் கிரிக்கெட் இல்லை- கங்குலி தீர்க்கம்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை