சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி அசத்தல் சாதனை!

by Lenin, Apr 27, 2018, 08:56 AM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி டி20 போட்டிகளில் 5000 ரன்கள் கடந்து அபார சாதனை படைத்துள்ளார்.

நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2018ஆம் ஆண்டின் 25ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய டி வில்லியர்ஸ் 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார்.


அதன் பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில், அம்பதி ராயுடு 53 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 82 ரன்கள் எடுத்தார். கடைசி வரை களத்தில் இருந்த தோனி 34 பந்துகளில் [7 சிக்ஸர்கள், இ பவுண்டரி] 70 ரன்கள் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதன் மூலம் டி20 போட்டிகளில் 5000 ரன்கள் கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். இதுவரை அவர் 5010 ரன்கள் குவித்துள்ளார். அவரை தொடர்ந்து கவுதம் கம்பீர் 4242 ரன்களும், விராட் கோலி 3591 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி அசத்தல் சாதனை! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை