சிறந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துகள் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நேற்று இந்திய அணி துபாயில் நியூசிலாந்து அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 251 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி 49 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம்பியன்களின் சாம்யபின் பட்டம் பெற்ற இந்திய அணிக்கு பல முனைகளிலும் இருந்தும் வாழ்த்து குவிந்து வருகிறது.
அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது, ' சிறந்த அணி சாம்பியன்ஸ் டிராபியை வெற்றி பெற்றுள்ளது. வருண் வந்தார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். விராட் கோலி கம்பேக் கொடுத்துள்ளார். ரோகித் சர்மா அருமையான ஆட்டம். சிறந்த தரமான ஆட்டத்தை இந்திய அணி நேற்று வெளியிப்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த வெற்றிக்கு முற்றிலும் தகுதியான அணி இது. வெல் டன். கடந்த 10 ஆண்டுகளில் உருவான சிறந்த அணியாக தற்போதைய இந்திய அணியை பார்க்கிறேன். கடந்த ஆண்டு டி20 இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் தொடர்ச்சியாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். '
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.