இந்திய அணி நியூசிலாந்து அணியை தோற்கடித்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை நேற்று கைப்பற்றியது. இதையடுத்து, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை குண்டானவர், ஈர்ப்பே இல்லாத கேப்டன் என்று விமர்சித்திருந்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாள ஷாமா முகமது வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து, தன் எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ஷாமா, கங்கிராட்ஸ் இந்தியா, அற்புதமான உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள். முக்கியமாக 76 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ரோகித்துக்கு ஹட்ஸ் ஆப். இக்கட்டான சூழலில் சிறந்த இன்னிங்ஸ் விளையாடிய ஷ்ரேயாஸ் , கே.எல். ராகுலுக்கும் வாழ்த்துகள் ' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக , சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பிட்னெஸ் குறித்து ஷாமா முகமது உருவக் கேலி செய்திருந்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்கள் அவரை கண்டித்திருந்தனர். பதிவை நீக்கவும் அறிவுறுத்தினர். தொடர்ந்து, பதிவை நீக்கிய ஷாமா, ' இது ஜனநாயக நாடு. யாரும் யாரையும் விமர்சிக்கலாம். தேவையில்லாமல் என்னை அட்டாக் செய்ய வேண்டாம்' என்றும் பாய்ந்தார்.
ஷாமாவின் தற்போதைய வாழ்த்தை பார்க்கும் போது, வடிவேலுவின் அது வேற வாய், இது நாற வாய் என்கிற டயலாக்தான் நினைவுக்கு வருகிறது.