கோப்பையை வென்றதும் முதல்முறை வெற்றி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் பலியானதும் முதல்முறை

First-time-winning-the-trophy-first-time-fans-killed-in-victory-celebrations

ஆர்.சி.பி அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றதையடுத்து கர்நாடகத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் இரு ரசிகர்கள் பலியானார்கள்.

ஐ.பி.எல் தொடரில் முதல் முறையாக ஆர்.சி.பி அணி கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து, கர்நாடகத்தில் வெற்றிக் கொண்டாட்டங்கள் களை கட்டின. பெலகாவியில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 25 வயது இளைஞர் மஞ்சுநாத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.

அதேபோல, ஷிமோகாவில் ரசிகர்கள் ரேலியில் இரு சக்கரவாகனத்தில் சென்ற அபிநந்தன் என்பவர் மற்றொரு இளைஞர் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதினார். இதில், அபிநந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்தார்.

18 வருட கால ஐ.பி.எல் தொடர் வரலாற்றில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் பலியாவது இதுவே முதன்முறை.