நியூசிலாந்து வீரர் நாதன் மெக்கல்லம் இறந்து விட்டதாக வதந்தி பரவியுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் நாதன் மெக்கலம் சர்வசே ஆட்டங்களில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டார். உள்ளுர் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், ட்விட்டர், ஃபேஸ்புக் அனைத்திலும் நாதன் மெக்கலம் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார் என அவரின் மனைவி வனேசா அறிவித்ததாக வதந்தி பரவியது. இந்த செய்தி நியூசிலாந்து ஃபேன் ஹப் என்ற ஃபேஸ்புக் முகவரியில் இருந்து வெளியானது.
இந்த வதந்தியைக் அறிந்து சிரித்த நாதன் மெக்கலம்,'' நான் உயிரோடுதான் இருக்கிறேன், இதற்கு முன்அடித்ததைக் காட்டிலும் அதிக வலிமையுடன் அடிப்பேன். யாரும் நம்பாதீர்கள், நான் இறந்துவிட்டேன் என்கிற செய்தி பொய்யானது. ல வ் யூ ஆல் “ என ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அமைப்பின் தலைமை நிர்வாகி ஹீத் மில்ஸ் கூறுகையில், “ நாதன்மெக்கலம் இறந்துவிட்டார் என்கிற செய்தி எனக்கும் கிடைத்தது. இந்தியாவில் இருந்து சிலர் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டார்கள். அதன்பின் நான் மெக்கலத்துக்கு தொடர்பு கொண்டேன். மெக்கலம் தன் செல்போனை எடுத்துப் பேசும் வரை என் மனது துடித்துக்கொண்டே இருந்தது. மெக்கலம் என்னிடம் நலமாக இருக்கிறேன். ஆக்லாந்தில் விளையாடி வருகிறேன் என்று கூறிய பின்புதான் நிம்மதி அடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.