தீ விபத்து சீசன்...நோ ட்ரெக்கிங்! - குரங்கணிக்கு மீண்டும் தடை

Fire Crash Season ... No Trekking! - Back prohibited kurankani

by Mathivanan, Jan 25, 2019, 14:20 PM IST

தீ விபத்து நடப்பதற்கான பருவகாலம் நிலவுவதால் குரங்கணி மலையேற்றத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது தேனி மாவட்ட வனத்துறை நிர்வாகம்.

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கணி மலைப் பகுதி யில் கடந்த ஆண்டு மார்ச் 11-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 23 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, குரங்கணிக்கு மலையேற்றம் செல்ல தேனி மாவட்ட வனத்துறையினர் தடை விதித்தனர். கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இந்த தடை நீடித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மலைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அறிவித்தார் டி.எஃப்.ஓ கௌதம்.

இப்போது மீண்டும் தீ விபத்துக்கான சூழல் இருப்பதால், மலையேற்றத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது வனத்துறை நிர்வாகம்.

You'r reading தீ விபத்து சீசன்...நோ ட்ரெக்கிங்! - குரங்கணிக்கு மீண்டும் தடை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை