தேர்தலுக்கு பின் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்காது என்ற உத்தரவாதத்தை என்னால் தர முடியாது- திருமாவளவன் திடீர் பல்டி

VCK to leave from DMK lead Alliance?

by Mathivanan, Feb 3, 2019, 13:42 PM IST

லோக்சபா தேர்தலுக்குப் பின் பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக கூட்டணி அமைக்காது என்ற உத்தரவாதத்தை தம்மால் தர முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றிருக்கிறது. ஆனால் விடுதலை சிறுத்தைகளை வெளியேற்றிவிட்டு பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர திமுக சீனியர்கள் முயற்சித்து வருகின்றனர்.

வடதமிழகத்தில் தங்களது வாரிசுகள் எப்படியும் வெல்ல வேண்டும் என்பதற்காகவே திமுக சீனியர்கள் பாமகவை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

அப்பேட்டியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியானது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. எங்களை கூட்டணியில் இருந்து வெளியேற்ற நினைப்பவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். தேர்தலுக்குப் பின் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்காது என்கிற உத்தரவாதத்தை என்னால் தர முடியாது என கூறியுள்ளார்.

திருமாவளவனின் இந்த பேட்டியானது திமுகவை டேமேஜ் செய்யக் கூடியதாக இருப்பதால் அக்கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

You'r reading தேர்தலுக்கு பின் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்காது என்ற உத்தரவாதத்தை என்னால் தர முடியாது- திருமாவளவன் திடீர் பல்டி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை