பாமக அதிமுக கூட்டணிக்குத்தான் போகும்....திருமாவளவன் அசால்ட் நம்பிக்கை

PMK will join AIADMK lead alliance, says Thirumavalavan

by Mathivanan, Feb 7, 2019, 11:32 AM IST

திமுக, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதிமுக கூட்டணியில்தான் பாமக இடம்பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகளை வெளியேற்ற வேண்டும் என்கிற குரல் அக்கட்சியில் வலுத்து வருகிறது. இதனால் விடுதலை சிறுத்தைகளும் மாற்று கூட்டணி குறித்து விவாதிக்க தொடங்கிவிட்டது.

சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இல்லத்தில் ரஜினிகாந்துடன் திருமாவளவன் நேற்று ஆலோசனை நடத்தியிருந்தார், இந்நிலையில் பாமக தொடர்பாக திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது:

பாஜகவை எதிர்ப்பது; பாமக இடம்பெறும் கூட்டணியில் இருந்து விலகுவது என்பது எங்களது நிலைப்பாடு. இப்போது திமுக, அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தலாம்.

ஆனால் கடைசியில் அதிமுக அணியில்தான் பாமக இடம்பெறும். அதிமுகவை மிரட்டி பாஜகவும் அந்த அணியில் இடம்பிடிக்கும்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

You'r reading பாமக அதிமுக கூட்டணிக்குத்தான் போகும்....திருமாவளவன் அசால்ட் நம்பிக்கை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை