தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி - கடைசி நேரத்தில் முடிவை மாற்றினார்

Dr. Krishnaswamy in the Tenkasi constituency had a irattai ilai symbol - the last time he changed the decision

by Gokulakannan.D, Mar 25, 2019, 15:41 PM IST

தென்காசி மக்களவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார் .

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் .கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். கூட்டணியில் தமக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட போது தனிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக கிருஷ்ணசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தென்காசி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்த கிருஷ்ணசாமி, தாம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது அதிமுக நேரடியாக 20 தொகுதிகளிலும், கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளான புதிய நீதிக் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சிகளும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட உள்ளன. இதனால் 22 தொகுதிகளில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் தேர்தலில் களம் காண உள்ளது. திமுகவோ தான் போட்டியிடும் 20 தொகுதிகளுடன், கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து அக்கட்சியின் உதயசூரியன் சின்னம் 24 தொகுதிகளில் களம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி - கடைசி நேரத்தில் முடிவை மாற்றினார் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை