திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்

Assembly by-election for 4 constituencies, Dmk set ready to announce candidates

by Nagaraj, Apr 13, 2019, 13:14 PM IST

அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், அரவாக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைமை இறுதி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை விட இடைத்தேர்தல் பரபரப்பு தான் உச்சகட்டத்தில் உள்ளது. ஆளும் அதிமுக ஆட்சியை தக்க வைக்க போராடுகிறது. திமுகவோ ஒட்டு மொத்த தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியையே கைப்பற்றி விடலாம் என கணக்குப் போடுகிறது .இதனால் இரு கட்சிகளுமே இந்த 22 தொகுதிகளுக்கும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற அதிக கவனம் செலுத்துகின்றனர்

தற்போது வரும் 18-ந் தேதி 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் 22 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் மே 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த 22 தொகுதிகளின் முடிவுகளைப் பொறுத்தே அதிமுக ஆட்சியை தக்க வைக்குமா ? பறிகொடுக்கப் போகிறதா? என்பது தெரிய வரும்.தற்போது மக்களவையுடன் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சார மும்முரத்தில் திமுக, அதிமுக கூட்டணிகளின் கட்சித் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.இ

இதற்கிடையில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் திமுகவும் அதிமுகவும் தீவிரமாக உள்ளன. திமுகவில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ஏற்கனவே இரு முறை போட்டியிட்டு தோல்வியுற்ற டாக்டர் சரவணன் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதேபோல் இதேபோல் அரவக்குறிச்சி தொகுதியில் சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய செயலாளரான சண்முகையா என்பவரை திமுக தலைமை முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது .கோவை சூலூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமியை நிறுத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம். இந்த பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று அதிமுகவும், தினகரனின் அமமுகவும் இந்த 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளதாக தெரிகிறது.

You'r reading திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை