தமிழக அரசியலைப் புரட்டிப் போடப் போகும் 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்... உச்சகட்ட எதிர்பார்ப்பு!

Assembly by-election results

by Nagaraj, May 23, 2019, 08:16 AM IST

மத்தியில் ஆட்சி அமைப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவ, தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த இடைத் தேர்தலில் 22 தொகுதிகளில் குறைந்தது 9 தொகுதிக ளில் வென்றால் மட்டுமே எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி நீடிக்கும்.

திமுகவோ 22 ல் 21 தொகுதிகளை வென்று விட்டால் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விடலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. இதற்கிடையில் இந்தத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவும் தனித்து நின்று கெத்து காட்டியுள்ளது. தமிழக அரசியலில் தினகரனின் முக்கியத்துவம் என்ன? என்பதும் இந்த 22 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் தெரிந்துவிடும்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தினகரனின் அமமுக கணிசமான இடங்களில் வென்றாலோ அல்லது அதிக வாக்குகள் பெற்று அதிமுகவின் படுதோல்விக்கு காரணமாக அமைந்தாலோ, அதிமுகவிலேயே மிகப்பெரிய மாற்றங்கள் நிகழலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

542 மக்களவைத் தொகுதிகளில் வாக்கு எண்னிக்கை தொடங்கியது.

தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் இடைத் தேர்தல் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

You'r reading தமிழக அரசியலைப் புரட்டிப் போடப் போகும் 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்... உச்சகட்ட எதிர்பார்ப்பு! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை