நம்பிக்கை அறக்கட்டளை நடத்திய சர்க்கரை நோய் மருத்துவ முகாம்..

by எஸ். எம். கணபதி, Sep 19, 2019, 17:38 PM IST

விருதுநகரில், நம்பிக்கைச் சிறகுகள் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருந்தகம் இணைந்து கடந்த 15ம் தேதியன்று, விருதுநகர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் ஆலோசனை முகாம் நடத்தின.

தமிழ்நாடு மாநில இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் துணைச் செயலாளர் டாக்டர் தனபால், மருத்துவ முகாமிற்கு தலைமை தாங்கினார். ஏ.கே.பி.எஸ். மருத்துவனையின் நிறுவனர் டாக்டர் ரத்னவேல், விருதுநகர் மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளர் ரத்னகுமார், விருதுநகர் மாவட்ட நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்ற பரிசோதனை செய்யப்பட்டது. சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அதை கட்டுப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகள் அளிக்கப்பட்டன.

இதே போல், பல்வேறு முகாம்களை நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை நடத்தி வருகிறது. இந்த அறக்கட்டளை உயர, உயர்த்த என்ற முழக்கத்தைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்குள் நலிந்த மற்றும் மிகவும் பின்தங்கிய மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துவது என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. மாறுபட்ட திட்டங்கள் (உட்புற மற்றும் வெளிப்புற செயல்பாடு) மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தொலைநோக்கு அறிக்கையை அடைய திட்டமிட்டுள்ளது.

அறக்கட்டளையின் குறிக்கோள்கள் வருமாறு:

• விருதுநகர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை வளர்ச்சியடையச் செய்யும் நோக்கில் திட்டங்களை செயல்படுத்துதல்.

•கிராமப்புறங்களில் பல்வேறு மருத்துவ முகாம்களை கிராம புற மக்களின் நோயற்ற வாழ்வை உறுதி செய்தல்.

• பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் உயர் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல்

• பிற்படுத்தப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான தேவைகளை குடிசைத் தொழில் மூலம் மேம்படுத்த உதவுதல்,

• சுற்றுப்புற சூழல் பாதுகாப்பது குறித்து மக்களுக்கு புரிய வைப்பதற்கான நிகழ்ச்சிகளை நடத்துதல்

• வருங்கால தலைமுறையின் பாதுகாப்பு, கல்வி, சுய தொழில் வேலைவாய்ப்பு, பற்றிய விழிப்புணர்வு கொடுத்தல் ஆகிய குறிக்கோள்களை கொண்டு இந்த அறக்கட்டளை செயல்படுகிறது.


More Tamilnadu News