என் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு... ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து..

by எஸ். எம். கணபதி, Dec 12, 2019, 12:18 PM IST
Share Tweet Whatsapp

நடிகர் ரஜினிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது :

எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

நல்ல உடல்-மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Leave a reply