தி.மு.க எம்.பி.க்கு கொரோனா தொற்று

by SAM ASIR, Sep 23, 2020, 22:29 PM IST

தி.மு.க எம்.பி.க்கு கொரோனா தொற்று

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.எஸ். பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்தியிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. மருத்துவ முன்கள பணியாளர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் இத்தொற்று பாதித்து வருகிறது.

தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதிக்கு இன்று கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Get your business listed on our directory >>More Tamilnadu News