Monday, Nov 29, 2021

ஆன்லைன் ரம்மி பயங்கரம் : இளைஞர்கள் சிக்கி சீரழிவது எப்படி?

by Balaji Nov 8, 2020, 12:25 PM IST

தமிழகத்தில் தற்போது தற்கொலைகளுக்கு வித்திடும் ஒரு கருவியாக உள்ள ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வரும் விரைவில் இது தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த ரம்மி விளையாட்டில் இளைஞர்கள் எப்படி சிக்கி சீரழிகிறார்கள் என்பது குறித்து போலீஸ் வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள். முதலில் டிவி மற்றும் யூ ட்யூப் விளம்பரங்களால் கவரப்பட்டு ஆன்லைனில் ரம்மி சர்க்கிள் ஆடுபவர்கள் எடுத்த எடுப்பிலேயே ஏகத்துக்கும் ஜெயிப்பார்கள். இதுதான் அவர்களுக்கு வீசப்படும் தூண்டில். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஜெயிக்கவும் மனம் சஞ்சலப்பட்டு தொடர்ந்து அந்த விளையாட்டுக்கு அடிமையாகி விடுவார்கள். கையிருப்பு தீர்ந்த உடன் கடன் வாங்குவார்கள். கடன் கொடுப்பதற்கென்றே சில செயலிகள் (apps) உள்ளன.

I Rupee, Cash bull, money more, Kissht போன்ற ஆப்கள்தான் அது. இவை அதிபயங்கர நாள் வட்டிக்கு கடன் கொடுக்கின்றன. இவற்றில் ஆதார் கார்டையும், பேன் கார்டையும், அக்கவுண்ட் விவரங்களையும் கொடுத்து விட்டால் போதும். உடனே நம் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பி வைப்பார்கள். 5000 ரூபாய் கடன் கேட்டால் 1500 ரூபாயை பிராசஸிங் கட்டணம் என எடுத்து கொண்டு 3500 ரூபாயை நமது கணக்கில் செலுத்துவார்கள். இந்த 3500 ரூபாயை வட்டியோடு சேர்த்து 5000 ரூபாயாக ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாவிட்டால் தினமும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதன் பின்னரும் பணத்தை செலுத்தாவிட்டால் போனில் கூப்பிட்டு மிரட்டுவார்கள். சிலர் இதற்கு பயந்து போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவதுண்டு ஆனாலும் அவர்கள் எமகாதகர்கள் விடுவார்களா? நமது போனில் காண்டாக்ட்ஸ் இல் உள்ள அத்தனை நண்பர்களுக்கும் கூப்பிட்டு உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இருக்கிறார்கள் உடனே கட்டச் சொல்லுங்கள் கட்டாவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டுவார்கள். (கடன் கொடுக்கும் போதே நம் காண்டாக்ட் லிஸ்டை கையாளுவதற்கான அனுமதியையும் அந்த ஆப் பெற்றுக் கொள்கிறது.) அதற்கும் மசியவில்லை என்றால் ஆபாசமாக பேசுவார்கள்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி வேறு ஒரு ஆப்பில் கடன்வாங்கி, மீண்டும் ஜெயித்து விடலாம், கடனை அடைத்து விடலாம் என ஒரு மாயச் சூழலுக்குள் விழுகிறார்கள். ஒரே மாதத்தில் கடன் தொகை எகிறிவிடும். இதனால் இதனால்தான் பலர் சொத்துக்களைக் இழக்கிறார்கள் சொத்து இல்லாதவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எப்படி கடன் கொடுத்துவிட்டு கெட்டவர்களை மிரட்டுவதற்காக ஏராளமானோரை ஒவ்வொரு ஆப் நிறுவனமும் சம்பளம் கொடுத்து நியமிக்கிறார்கள் வீட்டிலிருந்தே வருமானம், மார்க்கெட்டிங் இல்லை மாதம் 15,000 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் என புறநகர் ரயில், பேருந்துகளில் ஓட்டியிருக்கும் துண்டு பிரசுரங்களில் பல இம்மாதிரி டெலி காலிங் வேலைகளுக்கு தான் அழைக்கிறார்கள். தினமும் ஒரு சிம் கார்டையும் காண்டாக்ட் லிஸ்டையும் கொடுத்து விடுவார்கள். தவணை தேதிவரை பெண் பிரதிநிதிகள் போனில் அழைத்து கேட்பார்கள். தவணை தேதி தாண்டியதும் ஆண் பிரதிநிதிகள் லைனில் வருவார்கள். இப்படி மிரட்டு பவர்களிடம் கந்து வட்டிக்காரர்கள் எல்லாம் பிச்சை எடுக்க வேண்டும். இந்த ஆப்களின் விதிமுறைகள் எல்லாம் மிகக் கடினமானவையாகும் கொடூரமானவையாகவும் இருக்கும்.

மேலும் இதுதொடர்பாக வழக்கு புகார் என்று வந்தால் மும்பை மாநகர நீதிமன்ற எல்லைக்கு உட்பட்டது என்பதும் ஒரு நிபந்தனையாக இருக்கும். வாங்கிய கடனை கட்டாமல் வழக்கு தொடர்ந்தால் மும்பைக்கு தான் அலைய வேண்டியிருக்கும். குர்ஆனுடன் காரணமாக வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த கல்லூரி மாணவர்கள் வேலையில்லா இளைஞர்கள் குடும்பத் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த விபரீத வலையில் சிக்கியுள்ளனர். இதிலிருந்து தப்பிக்க தற்கொலை ஒன்றே தீர்வு என்று பலரும் முடிவெடுத்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். எனவேதான் இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. கேமிங் ஆப்களை மட்டுமில்லாமல் சட்டவிரோத கடன் வழங்கும் ஆப்களையும் அரசு தடை செய்ய வேண்டும்.

You'r reading ஆன்லைன் ரம்மி பயங்கரம் : இளைஞர்கள் சிக்கி சீரழிவது எப்படி? Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Tamilnadu News