உட்கட்சி பூசல் மட்டுமல்ல, ஆடியோ வீடியோவால் ஆடிப் போய் கிடக்கிறது அதிமுக. கட்சியின் சீனியர் செங்கோட்டையனை ஓரங்கட்ட நினைத்துள்ளார் எடப்பாடி. இதனால் கடுப்பான செங்கோட்டையன், கட்சியின் தான் எத்தனை பெரிய சீனியர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடமே நல்ல பெயர் எடுத்தவன் என்பதை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்.
இதனால் அவர் கட்சி தாவப்போகிறார் என்று செய்திகள் பரவியதால், தான் அத்தகைய முடிவை எடுக்கவில்லை என்பதை சொல்வதற்காக, , கட்சியில் கொள்கையில் உறுதியாக உள்ளவர் செங்கோட்டையன் ஜெயலலிதா பேசிய ஆடியோவை பொதுக்கூட்ட மேடையில் வெளியிட்டார் செங்கோட்டையன்.
இதையடுத்து எடப்பாடியின் ஆதரவாளர் ஆர்.பி.உதயகுமார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறு உருவம் இபிஎஸ் என்று சொல்லி வீடியோ வெளியிட்டார்.
செங்கோட்டையனுக்கு பதிலளிக்கும் விதமாகத்தான் இந்த வீடியோ உள்ளது என்று சர்ச்சை எழுந்தது.
இது ஒருபுமிருக்க, எடப்பாடியை ஜெயலலிதாவின் மறு உருவம் என்று சொன்னதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ் மகனும் முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத். அவர், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயக்குமார் அவர்களே…
நேற்று – மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்…
இன்று – மாண்புமிகு எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் புரட்சித்தமிழர் திரு.எடப்பாடி பழனிச்சாமி…
நாளை யாரோ…? என்ன விளையாட்டு இது…? என்று கேட்டிருக்கிறார்.
அதிமுகவில் உட்கட்சி விவகாரத்தில் உதயகுமார் சும்மா பேசி வருகிறார் என்பதை உணர்த்தும் விதமாக விளையாட்டுத்துறை என்பதை பெரிதுபடுத்திக் காட்டி இருக்கிறார் ரவீந்திரநாத்.
இதற்கு பதிலடிகொடுப்பதற்காக உதயகுமார், தேனி தொகுதி எம்.பி.யாக இருந்தவர் யார் என்றே எனக்கு தெரியாது. கூகுளில் தேடிப்பார்த்து சொல்கிறேன் என்று கேலி செய்துள்ளார்.