EVM மோசடியை அம்பலப்படுத்துவோம்... - மக்களுக்காகப் போராடும் கட்சியினர் ஆட்சியரிடம் மனு.

EVM மோசடியை ஆதாரங்களுடன் அம்பலபடுத்துவதற்காக மாதிரி EVM எந்திரத்தை தயார் செய்துள்ளோம். நாம் உருவாக்கியுள்ள இந்த EVM மாதிரி எந்திரத்தைக் கொண்டு EVM மோசடியை நிரூபித்துக் காட்டுகிறோம். அதற்காக செயல்முறை விளக்கம் (Demo) செய்து காட்ட நேரம் ஒதுக்கித் தாருங்கள்" எனக் கோரி மனு அளிக்க உள்ளனர் மக்களுக்காகப் போராடும் கட்சியினர்.

இது தொடர்பாக மக்களுக்காகப் போராடும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், நந்தினி ஆனந்தன் கூறியதாவது.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட ஆட்சியாளர்களையும் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். முதல் நிகழ்ச்சியாக இன்று (17.02.25) மாலை 4 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம்.

மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கும் நாள் மற்றும் நேரம் வருமாறு..

17.02.2025 மாலை 4 மணி, கோவை மாவட்டம்
18.02.2025, மாலை 4 மணி, சேலம் மாவட்டம்
19.02.2025 மாலை 4 மணி, திருநெல்வேலி மாவட்டம்
20.02.2025 மாலை 4 மணி, இராமநாதபுரம் மாவட்டம்
21.02.2025மாலை 4 மணி, விழுப்புரம் மாவட்டம்
24.02.2025 மாலை 4 மணி, திருச்சி மாவட்டம்
25.02.2025 மாலை 4 மணி, தஞ்சாவூர் மாவட்டம்
26.02.2025 மாலை 4 மணி, மதுரை மாவட்டம்
27.02.2025 மாலை 4 மணி, சென்னை மாவட்டம்
28.02.2025 மாலை 4 மணி, வேலூர் மாவட்டம்
03.03.2025 - மாலை 4 மணி, தேனி மாவட்டம்
04.03.2025- மாலை 4 மணி, தூத்துக்குடி மாவட்டம்
05.03.2025- மாலை 4 மணி, விருதுநகர் மாவட்டம்
06.03.2025- மாலை 4 மணி, புதுக்கோட்டை மாவட்டம்
10.03.2025- மாலை 4 மணி, திருப்பூர் மாவட்டம்
11.03.2025- மாலை 4 மணி, சிவகங்கை மாவட்டம்
13.03.2025- மாலை 4 மணி, திண்டுக்கல் மாவட்டம்
14.03.2025- மாலை 4 மணி, தென்காசி மாவட்டம்
17.03.2025 - மாலை 4 மணி, ஈரோடு மாவட்டம்
18.03.2025- மாலை 4 மணி, பெரம்பலூர் மாவட்டம்
19.03.2025- மாலை 4 மணி, கரூர் மாவட்டம்
20.03.2025- மாலை 4 மணி, திருவாரூர் மாவட்டம்

மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் மாவட்ட ஆட்சியாளர்களிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த நமது கட்சி உறுப்பினர்கள் மற்றும் EVM க்கு எதிரான, ஜனநாயக உணர்வுள்ள அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மற்ற மாவட்டங்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஏப்ரல் இறுதிக்குள் 38 மாவட்டங்களிலும் மனு அளிக்கும் நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

EVM ஒழிக்கப்பட்டு 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சீட்டில் நடத்தும் சூழ்நிலையை உருவாக்கும் குறிக்கோளை நோக்கி நாம் செயல்படுகிறோம். EVM தடை செய்யப்பட வேண்டும் என்பதை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் EVM ஒழிக்கப்பட்டால் நாடு முழுவதும் EVM ஒழிக்கப்படும். பாசிச சர்வாதிகாரம் ஒழிந்து ஜனநாயகம் காக்கப்படும்” என்று கூறியுள்ளார்.