தமிழகத்தின் இரு மொழி கொள்கையை அனைத்து மாநிலங்கும் கடைபிடிக்கும் நிலை - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி

தமிழகத்தின் இருமொழி கொள்கையை அனைத்து மாநிலங்களும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு வந்துள்ளன. இருமொழி கொள்கை காரணமாகவே தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் விரைவாக வளர்ச்சி பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது, மகாராஷ்டிராவில் மராத்தி தான் என மக்கள் கொதித்து எழுந்து விட்டார்கள் அமித்ஷா ஆங்கிலத்தில் இருந்த தண்டனை சட்டங்களை எல்லாவற்றையும் ஹிந்தியில் மாற்றி இருக்கிறார் . நீதி அரசர்களே குற்றம் சாட்டும் அளவுக்கு இந்தியை தினிக்கிறார்கள் அவர்களுக்கு தாய் மொழி மீது அக்கறை இருநதால் 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க்கி இருக்க வேண்டும். இன்னொரு மொழியை கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவிலேயே சட்டத்தின் ஆட்சி நடைபெறுவது தமிழகத்தில் மட்டும்தான். தமிழ்நாட்டை பொறுத்த வரை எந்த மதத்தினரும் வழிபாட்டிற்கு எந்த தடையும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர். ஆர்பி உதயகுமார், எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது நேரலை துண்டிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அப்பாவு, அவர் சொல்வதில் உண்மை இல்லை. முதல்வரை புகழ்ந்து பேசுவதை தவிர்த்துவிட்டு எதிர்க்கட்சிக்கு தான் அதிக வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. எதையும் கட் பண்ண வேண்டிய நோக்கம் எங்களுக்கு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என ஆளுநரே ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார் என்று பதில் அளித்தார்.