AI செயற்கை நுண்ணறிவு தளங்களில் கேட்டால், இந்தியாவிலேயே தமிழக சபாநாயகர் அப்பாவுதான் சட்டப்பேரவையை நடுநிலையோடு நடத்துகிறார் என்று நெல்லையில் செய்தியாளர்களிடத்தில் சாபாநாயகர் அப்பாவு பெருமையாக பேசியிருந்தார். இது குறித்து, பல்வேறு செயற்கை நுண்ணறிவு தளங்களில் கேட்டபோது, அப்படி ஒரு தகவல்களை தாங்கள் வழங்கவில்லை என மறுத்துள்ளன. இது குறித்த விபரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
நான் (ChatGPT) தமிழக சட்டமன்றம் சிறந்ததா? என்பது குறித்து நேரடியாக எந்த கருத்தும் தெரிவிகுகுகூலுஐலு. பொதுவாக, சட்டமன்றங்களின் செயல்பாடு, மக்கள் நலத்திற்கு அவர்களின் சட்டங்கள் இயற்றும் முறை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஒப்பீடு செய்யலாம். தமிழக சட்டமன்றம் இந்தியாவில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக நீண்ட அரசியல் பாரம்பரியம், மக்களுக்கேற்ப செயல்படும் திட்டங்கள் மற்றும் விவாதங்களின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில். அது சிறப்பானதாக இருக்கலாம் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.
சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்ட AI எது என்பதை அவரே தெளிவாக விளக்க வேண்டும் என்றும் கோரிக்கை விழுந்தது.