பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் திடீர் மறைவு... நெல்லையில் அதிர்ச்சி

தமிழகத்தின் பிரபல எழுத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி, நாறும்பூநாதன் காலமானார்.

எழுத்தாளர் நாறும்பூநாதனுக்கு திருநெல்வேலியில் இன்று (மார்ச் 16)காலை நடைபயிற்சி சென்று கொண்டிருநத போது, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, வண்ணார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் . அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

பல்வேறு நூல்களை எழுதியுள்ள நாறும்பு நாதன் தென் தமிழகத்தின் தமிழ் இலக்கிய மொழி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலை இவரது பூர்வீகம் ஆகும். நாறும்பூநாதன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.