வன்னியர்சங்க சொத்து... ராமதாஸிடம் 45 நிமிடங்கள் அன்புமணி பேசியது என்ன?

vanniyar-sangha-property-what-did-anbumani-talk-to-ramadoss-for-45-minutes-about

ராமதாஸ்- அன்புமணி இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வர ராமதாஸின் மகள்கள் ஸ்ரீகாந்தி மற்றும் கவிதா இருவரும் முயன்று கொண்டிருந்தனர். இதையடுத்தே, தந்தையை சந்திக்க தனயன் ஒப்புக் கொண்டார்.

ஆனால், அன்புமணியை சந்திப்பதை டாக்டர் ராமதாஸ் கொஞ்சமும் விரும்பவே இல்லை என்றே நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இதனால் அன்புமணி வரும்போது, தோட்டத்தில் வேலை செய்கிற 10 பணியாளர்களை அவ்வப்போது அங்கே ஏதாவது காரணத்தை கூறி வந்து செல்ல வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். பாமக நிர்வாகிகளுக்கும் தைலாபுரத்து வர ராமதாஸ் தடை விதித்து விட்டார்.

தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த அன்புமணி, ராமதாஸை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ராமதாஸ் மூத்த மகள் ஶ்ரீகாந்தியும் அங்கே இருந்தார். வன்னியர் சங்க சொத்துக்கள் பற்றிதான் முதலில் இருவரும் பேசியுள்ளார். பாமகவுக்கு என்று தனியாக சொத்துக்கள் இல்லை. வன்னியர் சங்க சொத்து ராமதாஸின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எனவே, முதலில் அதை பற்றியே பேசியிருக்கின்றனர். பாமக தலைவர் யார், பிரச்னைக்கு முக்கிய காரணகர்த்தாவான முகுந்தனுக்கு பதவி அளிப்பது பற்றி பேசியிருக்கிறார்கள். கூட்டணி பற்றிய முடிவை நான் மட்டுமே எடுப்பேன் அன்புமணியிடன் ராமதாஸ் கறாராக கூறி விட்டார். இதனால், சந்திப்பில் எதிர்பார்த்த பலன் இல்லை என்றே சொல்கிறார்கள்.