முதல்ல சின்னையாவை வந்து பார்த்துட்டு போங்க- நிர்வாகிகளுக்கு போன் போடும் சவும்யா அன்புமணி

First-come-and-see-Chinnaiya-Savumya-Anbumani-calls-the-administrators

டாக்டர் ராமதாஸ் ஒவ்வொரு நாளும் நீக்கம் அறிவிப்பை வெளியிடுவதன் பின்னணி குறித்து பாமக வட்டாரத்தில் நாம் விசாரித்த போது, பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. டாக்டரின் இந்த அவசரத்துக்கு பின்னால் பெரிய திட்டம் உள்ளதாம். தனக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்களை நியமித்துவிட்டு உடனடியாக பாமகவின் பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். அந்த பொதுக்குழுவில் மீண்டும் ஜிகே மணியை தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளார். வடிவேல் ராவணன் தற்போது ராமதாஸ அணிக்கே திரும்பிவிட்டதால் அவர் பொதுச்செயலாளராக வாய்ப்புள்ளது. அன்புமணியும் அவரின் ஆதரவாளர்களும் பொதுக் குழுவில் கலந்து கொள்ளவில்லை என்றால் கூடு பரவாயில்லை என்கிற முடிவில் ராமதாஸ் இருக்கிறார். அன்புமணி முகாமில் இப்போது அவரது மனைவி சவுமியா முக்கியமாக களப்பணி செய்து கொண்டிருக்கிறார். டாக்டர் ராமதாஸ் புதியதாக நியமிக்கும் நிர்வாகிகளை உடனடியாக தொடர்பு கொண்டு பேசும் சவுமியா, நம்ம கட்சியோட எதிர்காலம் முக்கியம். உங்களுக்கு சிறப்பான எதிர்காலமும் காத்துகிட்டிருக்கு.. முதல்ல சின்னய்யாவை வந்து பார்த்து விட்டு போங்க என்று போனில் பேசுகிறாராம். இப்படி, பாமகவில் சங்கதி போய்க் கொண்டிருக்கிறது.
மகள்