அப்போ நான் வரட்டா? கமலுக்கு சீட் வைகோ அவுட் கூட்டணி டவுட்

so-can-i-come-kamal-gets-a-seat-vaiko-is-out-alliance-is-tout

கடந்த 2021- சட்டமன்ற தேர்தலின் போது திமுக கட்சி காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணியுடன் கமலின் மக்கள் நீதி மய்யம் இணைந்த நிலையில் திமுகவின் கூட்டணியில் மாற்றம் ஏற்படவில்லை. இந்த கூட்டணியில், இருந்த மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை ஒதுக்கப்பட்டதால், வைகோ எம்.பி'யாக இருந்து வந்தார், அவரது பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது.

இந்த தேர்தலில் கூட்டணி கட்சியோன மதிமுகவிற்கு மீண்டும் ராஜ்சபா எம்.பி பதவி கிடைக்கும் வைகோ மீண்டும் எம்.பி ஆவார் என மதிமுகவினர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் மதிமுகவுக்கு பதிலாக கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக ஒரு தொகுதியை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள மூன்று தொகுதியில் திமுக வேட்பாளர்களை அறிவித்தது. இது மதிமுகவினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த வைகோவின் மகன் துரை வைகோ, பல முறை நாடாளுமன்றம் சென்ற மூத்த தலைவர் வைகோவுக்கு வாய்ப்பு கொடுக்காதது மிகவும் வருத்தமளிப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர், இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என அனைவரும் கலந்து கொண்டனர்.

ஆனால் வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சிக்கு மதிமுக சார்பில் யாரும் வரவில்லை. ஏற்கனவே மன வருத்தத்தில் இருப்பதாக துரை வைகோ கூறி இருப்பதை வைத்து பார்க்கும் போது திமுக கூட்டணியில் தொடர்ந்து மதிமுக நீடிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இதே கூட்டணியோடு திமுக தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட் நிலையில் ,வேட்பு மனுதாக்கல் நிகழ்ச்சியை வைகோ புறக்கணித்தது கூட்டணியில் பிளவு ஏற்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.