10th 12th பொதுத்தேர்வுகள் தேதி எப்போது வெளியாகும்? – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

When-will-the-10th-12th-public-exams-2025-date-be-released-Minister-Anbil-Magesh-Press-Meet

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை எப்போது வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (அக்டோபர் 25) தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மூலம் வெளியிடப்படுவது வழக்கம். தற்போது அக்டோபர் மாதம் என்பதால், அட்டவணை எந்த நேரத்திலும் வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

2025 - 2026ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், “அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த கூட்டத்திற்கு பிறகு 10 ம்ற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.