இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் - அதிரடியாக சரியும் தங்கம் விலை!

Today-Gold-and-Silver-Rate-in-Chennai-27-October-2025

சென்னை - அக்டோபர் 27: சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச விலை நிலவரங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக தீபாவளிக்கு முன் நாள்தோறும் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டி வந்தது. வெள்ளி விலையும் அதிரடியான உயர்வை சந்தித்தது.

ஆனால் தீபாவளி முடிந்த நிலையில் தங்கம் விலை அதிரடியான சரிவுகளை சந்தித்து வருகிறது. தங்கம், வெள்ளி விலை குறைவு என்பது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் முதலீட்டாளர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று (அக்டோபர் 27) காலை ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்தது ரூ.11,450க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.400 குறைந்து 91,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (அக்டோபர் 27) காலை வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்

26-10-2025 - ரூ.92,000/-
25-10-2025 - ரூ.92,000/-
24-10-2025 - ரூ.91,200/-
23-10-2025 - ரூ.92,000/-
22-10-2025 - ரூ.92,320/-
21-10-2025 - ரூ.96,000/-
20-10-2025 - ரூ.95,360/-
19-10-2025 - ரூ.96,000/-
18 -10-2025 - ரூ.96,000/-
17 -10-2025 - ரூ.97,600/-