தங்கதின் விலை இன்று (அக்டோபர் 28) அதிரடியாக கிராமுக்கு ரூ.150 வரை குறைந்துள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டியது. அதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ஒரு லட்சத்தை தாண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் தீபாவளிக்கு பின் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1200 வரை குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.150 குறைந்து ரூ.11,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.165 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலா வெள்ளி ரூ. 1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
- 27-10-2025 - ரூ.91,600/-
- 26-10-2025 - ரூ.92,000/-
- 25-10-2025 - ரூ.92,000/-
- 24-10-2025 - ரூ.91,200/-
- 23-10-2025 - ரூ.92,000/-
- 22-10-2025 - ரூ.92,320/-
- 21-10-2025 - ரூ.96,000/-
- 20-10-2025 - ரூ.95,360/-
- 19-10-2025 - ரூ.96,000/-
- 18-10-2025 - ரூ.96,000/-














