மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

வழக்கமான உடற் பரிசோதனைக்காக சென்னை மியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.

Vijayakanth

கடந்த 31-ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பிரச்சினைக்காக அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘விஜயகாந்துக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று காலை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுக்கும் அவர் அடுத்தகட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகல்கள் வெளியாகியுள்ளது.