இன்றைய ( 05.10. 2018) ராசிப்பலன்கள்

by Vijayarevathy N, Oct 5, 2018, 08:23 AM IST

இன்றைய ராசிப்பலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்: மேஷ ராசி அன்பர்களே, மனக் கவலை அகலும். கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படலாம். சாதுர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். உத்யோகத்தில் வீண் அலைச்சல் ஏற்படும்.

ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே, பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். பல முக்கிய பிரமுகர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.

மிதுனம்: மிதுன ராசி அன்பர்களே, புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைதுணையின் பேச்சுக்கு முக்கியத்துவம் தரவும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். உத்யோகத்தில் எதிர்பார்த்த பணி மாற்றம் ஏற்படும்.

கடகம்: கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் பிரச்சனை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம். எதிர்பாராத பயணங்கள் கடினமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முழு வெற்றி கிடைக்கும்.

சிம்மம்: சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார ரீதியாக சில சிக்கல்கள் வரக்கூடும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

கன்னி: கன்னி ராசி அன்பர்களே, முக்கிய விஷயங்களை தீர ஆலோசித்து செய்யவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் வரும்.

துலாம்: துலாம் ராசி அன்பர்களே, குடும்பத்தில் கஷ்டம் தீர வழி கிடைக்கும். அடிக்கடி டென்ஷன் ஆவதை குறைத்துக்கொள்ளவும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

விருச்சிகம்: விருச்சிக ராசி அன்பர்களே, எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகமாகும். குடும்ப பொறுப்புகள் கூடும். நெருங்கிய உறவினர்கள் உதவி அவ்வப்போது கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
தனுசு: தனுசு ராசி அன்பர்களே, குடும்பத்தின் மீது அதிக பற்று உண்டாகும். நண்பர்கள் கேட்ட உதவியை செய்து தர முடியும். ஆன்மீகத்தில் ஈடுபாடு வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும்.

மகரம்: மகர ராசி அன்பர்களே, சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். பொது ஜன தொடர்புகள் அதிகரிக்கும். வரவுக்கேற்ற செலவுகளும் காத்துக்கொண்டு இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.

கும்பம்: கும்ப ராசி அன்பர்களே, எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் வரும். குடும்பத்தில் எதிர்பார்த்தது கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

மீனம்: மீன ராசி அன்பர்களே, புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். பண விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்கவும். உத்யோகத்தில் அதிக கவனம் தேவை.

You'r reading இன்றைய ( 05.10. 2018) ராசிப்பலன்கள் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை