இன்றைய (08.10.2018) ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

by Vijayarevathy N, Oct 8, 2018, 08:22 AM IST

இன்றைய ராசி பலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.

Horoscope

மேஷம்:
மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல ஒருவர் அறிமுகம் ஆவார். உத்யோகத்தில் பொறுப்பான பதவிகள் தேடி வரும்.

ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் புதிய திட்டங்கள் போட முடியும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி ஆதரிப்பார்.

மிதுனம்:
மிதுன ராசி அன்பர்களே, பொறுப்பான செயல்களால் நல்ல பலன்களை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வெற்றி நிச்சயம்.

கடகம்:
கடக ராசி நேயர்களே, நினைத்த வேகத்தில் வேலைகளை செய்ய முடியும். நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போகவும்.

சிம்மம்:
சிம்ம ராசி அன்பர்களே, உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் அதிக கவனம் தேவை.

கன்னி:
கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் எதிர்பாரா செலவுகள் வரும். வாகனங்களை இயக்கும் போது நிதானமும், கவனமும் தேவை. வாழ்க்கைதுணை வழியில் நன்மை உண்டு. உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

Horoscope

துலாம்:
துலாம் ராசி அன்பர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பணத்தேவைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். புதிய தொழில் துவங்க வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்தில் விட்டு கொடுத்து போகவும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். பழைய வீட்டை சீரமைப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் நிறைய ஆலோசனை கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசி அன்பர்களே, பண வரவு கூடும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் விரும்பாத இடமாற்றம் மன வருத்தம் தரும்.

மகரம்:
மகர ராசி அன்பர்களே, பெற்றோரின் ஆலோசனை தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்ப வருமானம் நல்ல படி இருக்கும். விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கும்பம்:
கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகமாகும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். தெய்விக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் பொறுப்பான பதவிகள் தேடி வரும்.

மீனம்:
மீன ராசி நேயர்களே, புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் புதிய உற்சாகம் ஏற்படும்.

You'r reading இன்றைய (08.10.2018) ராசி பலன்கள் Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை