மனதை நிதானமாக வைக்க ஆனந்த பாலாசனம்

by Vijayarevathy N, Oct 9, 2018, 13:01 PM IST

ஆனந்த பாலாசனம் – ஆனந்த – இன்பமான பால- குழந்தை ஆசனம் என்று கூறப்படும் இவ்வாசனம் வேலை பலூ மற்றும் குடும்பப்பிரச்சனைகளால் ஏற்படக்கூடிய குழப்பங்களை நீக்கி மனதிற்கு அமைதியைத் தருகிறது.

செய்முறை:

பின்புறம் தரையில் படுமாறு படுத்துக்கொள்ளுங்கள்.

கால்கள் இரண்டையும் ஒன்றாக வைக்க வேண்டும்.

பாதங்களை நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.

கால்களை மெதுவாக மேலே உயர்த்த வேண்டும்.

பாதங்களை வளைத்து கைகளின் கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலால் இரு கால்களின் பெருவிரல்களையும் நன்றாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

முழங்கால்களை மெதுவாக வளைக்க வேண்டும். அதை தரையின் அருகில் கொண்டு வர வேண்டும்.

இதுவே ஆனந்த பாலசனம். பின்பு கால்களை மெதுவாக நீட்ட வேண்டும்.

விரல்களின் பிடியை தளர்த்த வேண்டும்.

பாதங்களை நேராக்கி கால்களை கீழே கொண்டு வர வேண்டும்.

இந்த ஆசனத்தை செய்யும் பொழுது முதுகு மற்றும் கழுத்து பகுதி தரையை ஒட்டியவாறே இருத்தல் வேண்டும்.

கால்களை தவிர பின்புறம் முழுவதும் தரையில் இருக்க வேண்டும்.
ஆனந்த பாலசனத்தின் நன்மைகள், முதுகுத்தண்டு , பின்புறம் , தொடை பகுதி ஆகியவற்றை நன்றாக நீட்டிக்க செய்யும்.

கைகளுக்கு வலுவளிக்கும்.

முதுகு வலியை நீக்கும்.

வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுப்பதால் செரிமான உறுப்புகளுக்கு அழுத்தம் கிடைக்கும்.

மனதை நிதானத்துடன் வைத்திருக்க உதவும்.

முன்னெச்சரிக்கை:

இந்த ஆசனத்தை செய்யும் முன்னர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:
கருத்தரித்திருக்கும் பெண்கள் மற்றும் மாதவிடாய் சுழற்சியில் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய கூடாது.

மேலும் இந்த ஆசனத்தை செய்யும் பொழுது கண்டிப்பாக உங்கள் கழுத்து மற்றும் முதுகுப்புறம் தரையில் அழுத்தியவாறு தான் இருக்க வேண்டும்.
அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்த்து விட வேண்டும்.

You'r reading மனதை நிதானமாக வைக்க ஆனந்த பாலாசனம் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை