இன்றைய ( 16.10. 2018) ராசி பலன்கள்

Today Horoscope

by Vijayarevathy N, Oct 16, 2018, 08:35 AM IST

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்: மேஷ ராசி நேயர்களே, வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். வெளியூர் பயணங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசி நேயர்களே, மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியம் உண்டு. நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய அலைச்சல் இருக்கும்.

மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, உறவினர்கள் வருகையால் வீடு களைக்கட்டும். உடல்நலம் சீராகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.

கடகம்: கடக ராசி நேயர்களே, திருமண முயற்சிகள் பலிதமாகும். உடன்பிறப்புகள் வழியில் சில மனசங்கடம் வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, குல தெய்வக் வழிபாடு அதிக நன்மையை தரும். குடும்ப பாரம் குறையும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் அதிக கவனம் தேவை.

கன்னி: கன்னி ராசி நேயர்களே, புதிய முயற்சிக்கு சாதகமான பலன் கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் வேலை பளு கூடும்.

துலாம்: துலாம் ராசி நேயர்களே, முக்கிய முடிவுகளை ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுப்பது நல்லது. நட்பு வட்டம் விரிவடையும். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். உத்யோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் வரும்.

விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய கடனை அடைக்க புது கடன் வாங்க வேண்டிவரும். உத்யோகத்தில் உழைப்பால் உயர முடியும்.

தனுசு: தனுசு ராசி நேயர்களே, உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உறவினர்களிடம் இருந்த பகை மறையும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.

மகரம்: மகர ராசி நேயர்களே, குடும்ப பெருமையை உயர்த்துவீர்கள். வரவை விட செலவு அதிகரிக்கும். எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.

கும்பம்: கும்ப ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறை ஏற்படும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள் உங்கள் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்.

மீனம்: மீன ராசி நேயர்களே, வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஆலோசனை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

You'r reading இன்றைய ( 16.10. 2018) ராசி பலன்கள் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை