இன்றைய (18.10.2018) ராசிபலன்கள்

Today (18.10.2018) Horoscope

by Vijayarevathy N, Oct 18, 2018, 08:18 AM IST

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்தநாள் இனிய நாளாக அமையட்டும்.

Rasi Palan

மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படும். பல நல்ல மனிதர்களின் நட்பு கிட்டும். பழைய வாகனத்தை மாற்ற வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் போட்ட திட்டம் நிறைவேறும்.

ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, திருமண காரியம் கைகூடும். புது வீடு மாற்றம் ஏற்படும். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் வரும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து வெகுவாக உயரும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும்.

கடகம்:
கடக ராசி நேயர்களே, குடும்ப வருமானத்தை உயர்த்த வழி கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பர். சுற்றியிருப்பவர்களின் உண்மையான சுயரூபத்தை புரிந்துக் கொள்ள முடியும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும்.

சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனதில் ஏற்பட்ட கவலை நீங்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.

கன்னி:
கன்னி ராசி நேயர்களே, மன அமைதி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மிகவும் உயர்வாக நடத்தப்படுவீர்கள். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் உருவாகும்.

துலாம்:
துலாம் ராசி நேயர்களே, ஆன்மிகப் ஆர்வம் கூடும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னைகள் ஓரளவு குறையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்ளவும். மற்றவர்கள் உங்களுக்கு சாதகமாக பேச தொடங்குவர். பிரபல நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் மரியாதைக் கூடும்.

தனுசு:
தனுசு ராசி நேயர்களே, ஓயாத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போகவும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சி ஒன்று நடக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

மகரம்:
மகர ராசி நேயர்களே, குடும்ப நபர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும். முக்கிய வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பணம் வரவு எதிர்பார்த்ததை விட சற்று குறைவாக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் பல வகையில் நன்மை கிடைக்கும். மனைவிவழியில் சுப செய்தி உண்டு. உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மீனம்:
மீன ராசி நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். தூரத்து உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை ஆதரிப்பர்.

You'r reading இன்றைய (18.10.2018) ராசிபலன்கள் Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை