இன்றைய (20.10.2018) ராசிபலன்கள்

Today (20.10.2018) Horoscope

by Vijayarevathy N, Oct 20, 2018, 08:20 AM IST

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Rasi Palan

மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, நீங்கள் பக்குவமாகப் பேசும் சுபாவம் உடையவர்கள். நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்ற முடியும். வசதி, வாய்ப்புகள் பெருகும். தொழில், வியாபாரம் நல்ல நிலையில் இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, காதல் கைகூடி திருமணத்தில் முடியும். உற்றார், உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.

மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் தேவைகள் அதிகமாகும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் வகையில் நன்மை உண்டு. உத்யோகத்தில் அடிக்கடி ஈகோ பிரச்சனை வந்து போகும்.

கடகம்:
கடக ராசி நேயர்களே, பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்பட தொடங்குவர். பழைய வீட்டிற்கு மாற வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்களை புரியும்.

சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, மதிப்பு, மரியாதை வெகுவாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பும். நல்ல செய்தி ஒன்று உங்கள் காதில் வந்து விழும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசி நேயர்களே, குடும்ப பாரம் குறையும். விலை மதிக்கத்தக்க பொருட்களை வாங்குவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். தொழில், வியபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம்:
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடி வருவர். மனதில் தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, நண்பர்கள் மூலமாக நல்ல விஷயங்கள் நடக்கும். திட்டமிட்ட பயணங்கள் பலன் தருவதாக அமையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிகளை விரைவாக முடிக்க முடியும்.

தனுசு:
தனுசு ராசி நேயர்களே, உங்கள் விருப்பங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

மகரம்:
மகர ராசி அன்பர்களே, முக்கிய நேரங்களில் அனுபவ அறிவை பயன் படுத்துவது நல்லது. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உத்யோகத்தில் செல்வாக்கு கூடும்.

கும்பம்:
கும்ப தனுசு ராசி நேயர்களே, குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விருப்பம் ஏற்படும். நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்ய முடியும். செய்தொழிலில் மேன்மை கிடைக்கும்.

மீனம்:
மீன ராசி நேயர்களே, எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாகும். மற்றவர்களிடம் பேசும் போது பொறுமையை கடைப்பிடிக்கவும். உடன்பிறப்பு வகையில் சில பிரச்சனைகள் வரக்கூடும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

You'r reading இன்றைய (20.10.2018) ராசிபலன்கள் Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை