இன்றைய (26.10.2018) ராசிபலன்கள்

Today (26.10.2018) Horoscope

Oct 26, 2018, 07:47 AM IST

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Rasi palan

மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, சொந்த வேலைகளை முடிப்பதில் வேகம் கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணம் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து போகவும்.

ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, பயணங்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை ஆதரிப்பர்.

கடகம்:
கடக ராசி நேயர்களே, துணிச்சல் அதிகரிக்கும். உடன்பிறப்பு வகையில் செலவுகள் வரும். முக்கிய காரியங்கள் சிறப்பாக நடக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, தியானம் வகையில் மன நிம்மதி உண்டாகும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி:
கன்னி ராசி நேயர்களே, அடுத்தவர் கேட்ட உதவியை செய்து தருவீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். வாகனங்களில் செல்லும்போது பொறுமை அவசியம். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்ய வேண்டாம்.

துலாம்:
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் புது திட்டம் நிறைவேறும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசி நேயர்களே, குடும்ப வரவு செலவு உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் நலம் சீராகும். புதிய முயற்சிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மகரம்:
மகர ராசி நேயர்களே, விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்ள முடியும். திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடக்கும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் தரப்படும். தொழில், வியாபாரத்தில் பெரிய மாற்றம் வரும்.

கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் பண வரவு கூடும். நண்பர்கள் உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தருவர். வீட்டு பராமரிப்பு செலவு அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.

மீனம்:
மீன ராசி நேயர்களே, எதிர்பார்த்த காரியம் விரைவில் முடியும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். தொழில், வியாபாரத்தில் நன்மை உண்டாகும்.

You'r reading இன்றைய (26.10.2018) ராசிபலன்கள் Originally posted on The Subeditor Tamil

More Spirituality News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை