இன்றைய ( 29 .10. 2018) ராசிபலன்கள்

Today Tamil Horoscope

by Vijayarevathy N, Oct 29, 2018, 09:54 AM IST

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்: மேஷ நேயர்களே, சொந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். முக்கிய நேரத்தில் சாதுரியமாக செயல்படுவீர்கள். சிறிய முதலீட்டில் புதிய தொழில் தொடங்க முடியும்.

ரிஷபம்: ரிஷப ராசி நேயர்களே, நீண்ட விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இயலும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபடு உண்டாகும். தொழிலில் வளர்ச்சியும் வருமானமும் திருப்தி தரும்.

மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, ஆன்மிக எண்ணம் மேலோங்கும். பழைய கடன் தொல்லைகள் ஓரளவு சீராகும். கணவன் மனைவி உறவில் இருந்த சிக்கல் தீரும். உத்யோகத்தில் சம்பளம் உயர்வு உண்டாகும்.

கடகம்: கடக ராசி நேயர்களே, மனதில் இருந்துவந்த பயம் பதற்றம் நீங்கும். குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் இரண்டும் உண்டு. பண வரவு திருப்தியளிக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும்.

சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும். ஞாபக மறதி தொந்தரவு இருக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பண மழை பொழியும்.

கன்னி: கன்னி ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்து கிடைக்கும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வருமானம் சீராகும்.

துலாம்: துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தேவையான பணம் கைக்கு வரும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் இட மாற்றம் உண்டு.

விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, மனதில் தெம்பும், தைரியம் அதிகரிக்கும். எதிர்பாராத விதத்தில் செலவுகள் ஏற்படும் விஐபிகளின் அறிமுகமும் ஆதரவும் கிட்டும். செய்தொழில், வியாபாரம் செழிக்கும்.

தனசு: தனுசு ராசி நேயர்களே, அனுபவ அறிவை கொண்டு எதிலும் ஜெயிக்க முடியும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும். கணவன் மனைவி உறவில் குதூகலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிவரும்.

மகரம்: மகர ராசி நேயர்களே, புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். விலகிய சொந்தம் மீண்டும் தேடி வருவர். உடல் ரீதியாக இருந்த பிரச்னைகள் தீரும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் விலகும்.

கும்பம்: கும்ப ராசி நேயர்களே, புது நபர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். குடும்ப பாரம் கூடும். கணவன் மனைவி உறவில் இனிமை கூடும். உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

மீனம்: மீன ராசி நேயர்களே, எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் வழியில் மனமகிழ்ச்சி கிடைக்கும். உத்யோகத்தில் நிறைய சாதிக்க முடியும்.

You'r reading இன்றைய ( 29 .10. 2018) ராசிபலன்கள் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை