இன்றைய ( 30 .10. 2018) ராசிபலன்கள்

Todays Tamil Horoscope

by Vijayarevathy N, Oct 30, 2018, 10:33 AM IST

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்: மேஷ ராசி நேயர்களே, ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். திருமண காரியம் கைகூடும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. உத்யோகத்தில் பதவி உயர்வு கிட்டும்.

ரிஷபம்: ரிஷப ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியங்கள் விரைவாக முடியும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவர். உடல் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். செய்தொழில், வியாபாரம் செழிக்கும்.

மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, தன வரவுக்கூடும். குல தெய்வ வழிபாடு தடையின்றி நடக்கும். உடலுக்கு ஒவ்வாத உணவுகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும்.

கடகம்: கடக ராசி நேயர்களே, பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பர். பழைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வெளி ஆதரவு பெருகும்.

சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆனந்தம் கூடும். புது நபர்களிடம் அனாவசிய பேச்சுகளை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் நெருக்கும் உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி: கன்னி ராசி நேயர்களே, பெற்றோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த தொந்தரவுகள் குறையும்.

துலாம்: துலாம் ராசி நேயர்களே, ஆன்மீக ஈடுபாடு உண்டாகும். புது வாகனம் வாங்கும் யோசனை வரும். உறவினர் வழியில் மகிழ்ச்சியும், ஆதாயங்களும் பெருகும். தொழில், வியாபாரம் வகையில் போட்டி இருக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்திற்கு பெரிய நன்மைகள் கிடைக்கும். அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். கூட்டு தொழில் வியாபாரம் சிறக்கும்.

தனுசு: தனுசு ராசி நேயர்களே, புதுமையான திட்டங்களை தீட்டி அதை வழிவகை செய்ய முடியும். இல்வாழ்வில் இனிமை கூடும். கொடுக்கல், வாங்கலில் உஷாராக செயல்படவும். தொழில் மாற்றத்தில் விருப்பம் ஏற்படும்.

மகரம்: மகர ராசி நேயர்களே, குடும்பத்திற்கு தேவையானது கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புடைய காரியங்கள் ஆதாயம் தரும். கணவன் மனைவிடையே இணக்கமான போக்கும் காணப்படும். உத்யோகத்தில் எதிர்பார்த்த மன நிம்மதி இருக்கும்.

கும்பம்: கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் பொன், பொருள் ஆபரண சேர்க்கை ஏற்படும். கடன் பிரச்னை பாதியாக குறையும். தியானம், யோகா போன்றவற்றில் கவனம் செல்லும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும்.

மீனம்: மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். பல வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சிரமம் இன்றி சமாளிக்க முடியும். பணம் பலவகையில் வந்து சேரும். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும்.

You'r reading இன்றைய ( 30 .10. 2018) ராசிபலன்கள் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை