இன்றைய ( 01 .11. 2018) ராசிபலன்கள்

Todays Tamil Horoscope

by Vijayarevathy N, Nov 1, 2018, 08:35 AM IST

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்: மேஷ ராசி நேயர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்ப நபர்களிடம் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். மன தைரியம் கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்ககளின் ஆதரவு உண்டு.

ரிஷபம்: ரிஷப ராசி நேயர்களே, பெற்றோர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். மறைமுக எதிரிகள் தொல்லை நீங்கும். மனதில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரியவரும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லையே என ஆதங்கபடுவீர்கள். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் வரும்.

கடகம்: கடக ராசி நேயர்களே, தான தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்கள் வகையில் வேண்டிய உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.

சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் பங்களிப்பு அதிகமாக இருக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பழைய கடனை அடைக்க புது வழி பிறக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும்.

கன்னி: கன்னி ராசி நேயர்களே, வரவேண்டிய பணம் ஒரு சில சிரமத்திற்கு பின் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.

துலாம்: துலாம் ராசி நேயர்களே, விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவர். நண்பர்கள் வகையில் பண விரையம் ஏற்படும். மனம் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரித்து பேசுவர்.

விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் இனி சிறப்பாக நடந்தேறும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

தனுசு: தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கேட்ட இடத்தில் பணம் உதவி கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போகவும்.

மகரம்: மகர ராசி நேயர்களே, எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு. பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.

கும்பம்: கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் எதிர்பாராத திருப்புமுனை ஏற்படும்.

மீனம்: மீன ராசி நேயர்களே, நெருங்கிய உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனங்களில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். மனைவி வழியில் நல்லது நடக்கும். தொழில், வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.

You'r reading இன்றைய ( 01 .11. 2018) ராசிபலன்கள் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை