கஜா புயல்: பார்வையிட வர முடியாது... எடப்பாடி கோரிக்கையை நிராகரித்த மோடி! Exclusive

PM Modi declines Edappadi Demands

Nov 24, 2018, 16:06 PM IST

கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து ரூ 15,000 கோடி நிவாரண நிதி வேண்டும் என வலியுறுத்தினார் எடப்பாடி. இதற்கு எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை பிரதமர் மோடி.

மோடியிடம் எவ்வித நம்பிக்கையான வார்த்தைகளும் வெளிப்படாத நிலையில், ஏகப்பட்ட நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கியிருக்கிறது. ஜீரணிக்கவே முடியாத அளவுக்கு கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை சரி செய்ய முதல் கட்ட நிதியை ரிலீஸ் செய்யாத முடியாத அளவுக்கு நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறோம். அதனால், முதல் கட்டமாக 1000 கோடி நிதியை நீங்கள் கொடுத்து உதவ வேண்டும் " என வலியுறுத்தியிருக்கிறார் எடப்பாடி.

ஆனால், அதற்கு அசைந்து கொடுக்காத மோடி, மத்திய குழு வந்து ஆராயும். அக்குழு கொடுக்கும் ரிப்போர்ட்டை வைத்து முடிவு செய்யப்படும். அதன் பிறகே நிதி உதவி செய்ய முடியும். எமது அரசும் நிதி நெருக்கடியில்தான் இருக்கிறது என சொல்லி, எடப்பாடியின் கோரிக்கையை மறுதலித்துள்ளார் மோடி.

மேலும், புயல் பாதிப்புகளை பார்வையிட நீங்கள் வர வேண்டும் என எடப்பாடி வைத்த கோரிக்கையையும் நிராகரித்துள்ளார் மோடி. சென்னை திரும்பிய எடப்பாடி, சீனியர் அமைச்சர்களிடம் சொல்லி வருத்தப்பட்டதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-எழில் பிரதீபன்

You'r reading கஜா புயல்: பார்வையிட வர முடியாது... எடப்பாடி கோரிக்கையை நிராகரித்த மோடி! Exclusive Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை