Sunday, Dec 5, 2021

அண்ணன் ரஜினிகாந்திடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்ட தங்க தமிழ்ச்செல்வன் - தினகரன் திகில்

Dinakaran says Tamilselvan asked appoinment to Rajinikanth

by Mathivanan Dec 24, 2018, 11:57 AM IST

அமமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ள ஆண்டிபட்டி தங்க தமிழ்ச்செல்வன், நடிகர் ரஜினிகாந்திடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருப்பது தினகரன் மற்றும் அதிமுகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் பலரும் திமுகவை நோக்கி செல்வதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. இதில் தங்க தமிழ்ச்செல்வனும் அடக்கம்.

ஆனால் அதிமுகவுடன் மட்டும் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். தங்க தமிழ்ச்செல்வனின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில் அதிமுகவுக்கு திரும்புவது என்ற முடிவு தாமதமானது.

இதனிடையே ‘அண்ணன்’ ரஜினிகாந்த் என தங்க தமிழ்ச்செல்வன் அழைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நாம் விசாரித்த போது, ரஜினிகாந்தை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.

இதேபோல் அதிமுக எம்.எல்.ஏக்கள், தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் சிலரும் கூட ரஜினியை சந்திக்க விரும்புகின்றனர். ஆனால் ரஜினிகாந்தின் ஆலோசகர்களோ இப்போதைக்கு எந்த சந்திப்பும் வேண்டாம். ஜனவரி மாதத்தில் அனைத்தையும் வைத்துக் கொள்ளலாம் என கூறியிருக்கின்றனர்.

இதையடுத்து ஓய்வெடுக்க அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் புறப்பட்டுப் போனார் ரஜினிகாந்த். அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரை ரஜினிகாந்த் சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தங்க தமிழ்ச்செல்வனின் இந்த தடாலடி மூவ் தினகரன் மற்றும் அதிமுக தரப்பை அதிர வைத்துள்ளது.

You'r reading அண்ணன் ரஜினிகாந்திடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்ட தங்க தமிழ்ச்செல்வன் - தினகரன் திகில் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News