கொரோனா வீடியோ கேமை உருவாக்கிய கியூபா நாட்டு சிறுவன் !

by Loganathan, Sep 16, 2020, 20:53 PM IST

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து பல நாடுகளும் பொது முடக்கத்தை அறிவித்து இருந்தன. இதனால் மாதக்கணக்காய் பள்ளி குழந்தைகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது .

இந்நிலையில் கியூபா நாட்டின் ஹவானா தீவைச் சார்ந்த வெலாஸ் என்ற 12 வயது சிறுவன் , கொரோனா வைரஸ் குறித்த வீடியோ கேமை உருவாக்கி அசத்தியுள்ளான் .

இந்த கேமானது கொரோனா வைரஸ் உருவான இடம் மற்றும் அதை தடுக்கும் தடுப்பூசி மூலக்கூறுகள் மற்றும் அதனை அழிக்கும் வழிமுறைகள் போன்றவற்றை உள்ளடக்கியவாறு இந்த வீடியோ கேம் உருவாக்கப்பட்டதாக அந்த சிறுவன் கூறியுள்ளார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக , மாதக்கணக்கில் வீட்டில் இருந்ததால் , தம்மால் இந்த வீடியோ கேமை உருவாக்க முடிந்ததாகவும் அச்சிறுவன் கூறியுள்ளான்.

READ MORE ABOUT :

More Technology News

அதிகம் படித்தவை