குரோம் பிரௌசரில் இன்னும் எளிதாகிறது வாய்ஸ் search

by SAM ASIR, Dec 23, 2020, 18:38 PM IST

கூகுளின் குரோம் பிரௌசரில் ஏற்கனவே குரல் தேடல் வசதி (voice search option) உள்ளது. இது பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவதாகும். குரோம் பிரௌசரை பயன்படுத்தும்போது கூகுள் அசிஸ்டெண்ட்டையும் ஒருங்கிணைக்கும் வசதியைக் கொண்டு வரக் கூகுள் நிறுவனம் முயற்சித்து வருகிறது. குரோம் ஆண்ட்ராய்டு செயலியில் இவ்வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

குரோம் பிரௌசருடன் கூகுள் அசிஸ்டெண்ட்டை ஒருங்கிணைப்பதற்கு chrome://flags/#omnibox-assistant-voice-search என்ற இணைப்பைப் பயன்படுத்தலாம். ஆம்னிபாக்ஸ் அசிஸ்டெண்ட் வாய்ஸ் சியர்ச்சை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த மாற்றம் நீங்கள் ஆண்ட்ராய்டுக்கான குரோமை மறுபடியும் புதிதாகத் திறக்கும்போது (restart) பயன்பாட்டுக்கு வரும். இதைச் செய்தபிறகு நீங்கள் குரோம் பிரௌசரின் முகவரி பட்டியிலுள்ள (address bar) மைக் (mic) பொத்தானை அழுத்தியதும் கூகுள் அசிஸ்டெண்ட் உதவிக்கு வந்து உங்கள் கேள்விக்குப் பதில் கொடுக்கும். இது கூகுள் அசிஸ்டெண்ட்டை பயன்படுத்துவதுபோன்றே இருக்கும். ஆனால், இம்முறை எளிதாகத் தோன்றும்.

கூகுள் அலுவல் ரீதியாக இவ்வசதியை இனிமேல்தான் அறிமுகம் செய்யவேண்டும். இதைப் பயன்படுத்த குரோம் பிரௌசரின் தற்போதைய பதிப்பான 87க்கு மேம்படுத்தப்படவேண்டும். புதிய குரோம் 87ன் வேகம் 25 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும், அது குறைவான அளவு RAMஐ பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. பயன்பாட்டில் இல்லாத பட்டிகள் (tabs) மற்றும் செயல்பாடுகளை (process) உறக்க நிலையில் (sleep) வைப்பதன் மூலம் குரோம் 87 பயன்பாட்டுக்கு மின்சாரம் குறைவான அளவே செலவாகிறது.

More Technology News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை