Saturday, Oct 16, 2021

64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை

by SAM ASIR Mar 6, 2021, 21:29 PM IST

ரெட்மி நோட் 9 வரிசை ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ரெட்மி நோட் 10 போன்கள் அறிமுகமாகியுள்ளன. இவை சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டவை. 120 Hz ரெப்ஃரஷ் விகிதாச்சாரம் கொண்டதாக ரெட்மி நோட் 10 ப்ரோ உள்ளது.

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
சிம்: இரட்டை நானோ சிம்
தொடுதிரை: 6.67 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல்)
இயக்கவேகம்: 6 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (512 ஜிபி வரை மைக்ரோ எஸ்டிகார்டு மூலம் உயர்த்தலாம்)
செல்ஃபி காமிரா: 16 எம்பி ஆற்றல்


குவாட் காமிரா: 64 எம்பி + 8 எம்பி + 5 எம்பி + 2 எம்பி ஆற்றல்
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 732 SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; எம்ஐயூஐ 12
மின்கலம்: 5050 mAh
சார்ஜிங்: 33W ஃபாஸ்ட் சார்ஜிங்
4ஜி, VoLTE, வைஃபை, புளூடூத் வி5.0, அகச்சிவப்பு (ஐஆர்) வசதி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி சாதனம் ரூ.15,999/- விலையிலும் 6 ஜிபி +128 ஜிபி சாதனம் ரூ.16,999/- விலையிலும் மார்ச் 17ம் தேதி முதல் கிடைக்கும். அமேசான், மி.காம், மி ஹோம் ஸ்டோர்களில் இதை வாங்கலாம்.

You'r reading 64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Technology News