குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்துங்கள் - தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பெற்றோருக்கு அறிவுரை

தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளி 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளி 100 ஆண்டுகளை கடந்து வெற்றிக்கரமாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று தலைமை ஆசிரியர் ஜான் மைக்கேல் அந்தோணி முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரெஜினி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி ஆசிரியை ஜெயா வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன், வட்டார கல்வி அலுவலர் முத்துலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்புரையாற்றிய முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி பேசியதாவது, ங பெற்றோர்கள் பணத்தை விடவும் தங்களது குழந்தைகளுடன் நேரத்தை அதிகமாக செலவிட வேண்டும். அப்படி, வளர்க்கப்படும் குழந்தைகள் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவார்கள். தினமும் ஒரு வேளையாவது குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும். இது அவர்களுக்கு மொபைல் போன் பயன்பாட்டை தூரமாக்கும். குழந்தைகளின் நலனுக்காக ஆசிரியர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு பெற்றோர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்

தலைமை ஆசிரியர் ஜான் மைக்கேல் அந்தோணி பேசுகையிவ்ல, ' விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாதந்தோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருடிகிறது. இதனால், தங்கள் பள்ளியில் விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மிகக் குறைவு என்று பெருமிதம் கொண்டார். தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சியில் பங்காற்றிய புரவலர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கல்வி, விளையாட்டு, ஒழுக்கம், பெற்றோர் ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு நூற்நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.பின்னர், பள்ளியின் சாதனைகள் குறித்த ஆண்டு அறிக்கையை ஆசிரியை சாலிகா பானு வாசித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராஜு மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தன.ர மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெற்றோர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.