தென்காசி மாவட்டம் ரெட்டியார்பட்டியை சேர்ந்த கதிர் மற்றும் இன்பராஜ் ஆகிய இருவரும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் சைபர் கிரைம் பாதுகாப்பு பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர் . இன்பராஜூக்கு இன்று பிறந்த நாள் ஆகும். இருவருக்கும் 21 வயதாகிறது.
நண்பர்கள் இருவரும் இன்று (மார்ச் 11 )பல்கலைக்கழகத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளனர். கதிர் இரு பைக்கை ஓட்டியுள்ளார். மானூர் அருகே சென்ற போது, மழை பெய்ததால் கதிர் மேல் பையில் இருந்த செல்போனை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைக்க முயன்றுள்ளார். அப்போது, பைக் நிலை தடுமாறி சாலையருகே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில், இன்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறந்தநாளில் மாணவன் இன்பராஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.