தென்காசி_மாவட்டம், புளியங்குடி பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், 'மூன்று மொழி கொள்கைக்கு ஆதரவாக 10 லட்சம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மே மாதத்தில் ஒரு கோடி இலக்கை எட்டுவோம்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி மூன்று மொழி படிக்கக்கூடிய மாணவர்கள் மொத்தமே ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தான் உள்ளனர் என்று கூறுகிறார். சிபிஎஸ்இ பள்ளியில் 1635 பள்ளிகள் உள்ளன. 15 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் மும்மொழிகள் படிக்கின்றனர். தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் பிரிவில் 479 பள்ளிகள் உள்ளன. அந்த குழந்தைகள் தமிழ் மொழியும் வேறு மொழிகளும் படிக்கிறார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடத்தில் 3 மொழிகள் சொல்லிக் கொடுக்கிற 4479 பள்ளிகள் உள்ளன. இங்கு, சராசரியாக 14 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆக மொத்தம் 30 லட்சம் குழந்தைகள் மும்மொழிகளை கற்கின்றனர்.
திமுகவிற்கு தேர்தல் நிதி மதுபான ஊழலில் தான் வருகிறது. டாஸ்மாரக் நிறுவனம் மதுபான கொள்ளையை இவர்கள் தான் செய்கிறார்கள். தமிழகத்தில் பெண்களின் தாலியை பறித்து ஆட்சியாளர்கள் ஆட்சியில் அமர்ந்துள்ளனர் என்பதுதான் உண்மை. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் இந்திய குடிமகனா? தமிழகத்தில் எந்த எம் பி, எம் .எல், ஏக்கள் குழந்தைகள் இரு மொழி படிக்கிறார்கள். அரசு பள்ளியில் படிக்கக்கூடிய 52 லட்சம் குழந்தைகளுக்கும் தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய குழந்தைகளுக்கும் சமமான கல்வி இருக்க வேண்டும்.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை திவாலாகி விட்டது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியைத் தவிர ஆங்கில மொழி எழுத்து படிக்க கூடியவர்கள் அதிகமாக உள்ளனர். 27 சதவீத பேர் ஆங்கிலத்தை எடுத்து படிக்கின்றனர். தமிழகத்தில் கற்றல் அறிவு குறைந்துள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார் மதுபான ஊழல் வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காக மும்மொழி கொள்கையை எதிர்த்து திமுக அதிகமாக நாடகமாடி வருகிறது . அரசு பள்ளி மாணவர்கள் இப்படித்தான் படிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் கனிமொழிக்கு என்ன தகுதி உள்ளது? கனிமொழி மகனுக்கு ஒரு நியாயம், ஏழை மாணவர்களுக்கு ஒரு நியாயமா?
மீனவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக மார்ச் 13 ஆம தேதி தமிழக மீனவர்கள் 36 பேர் தமிழக பாஜகவினரோடு சேர்ந்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளனர். பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் இலங்கை செல்கிறார். அப்போது, கச்சத்தீவு பற்றி பேசப்படும்.
அண்ணாமலை பேட்டியளித்த போது பா.ஜ.க ஓபிசி அணியின் மாநில துணை தலைவர் விவேகம் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.