செங்கோட்டையில் மர அறுவை ஆலையில் பணம் திருடியவர் கைது

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பார்டர் பகுதியில் சிவம் மர அறுவை ஆலை உள்ளது. கடந்த 6 ஆம் தேதி மர அறுவை ஆலையில் இரவில் மேஜை லாக்கரை உடைத்து ரொக்க பணம் ரூ. 45 ஆயிரம் ஆயிரம் திருடு போனது. இது குறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். செங்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் முரளீதரன் மற்றும் தலைமை காவலர் ராஜா சிங் மற்றும் அல்போன்ஸ் ராஜா, கணேஷ் குமார் ஆகியோர்சம்பவ இடம் சென்று விசாரித்தனர். சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதே ஆலையில் வேலை பார்த்து வந்த மாரியப்பன்(45 ) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், மாரியப்பனிடம் இருந்து ரூ. 45 ஆயிரத்தை கைப்பற்றி , சிறையில் அடைத்தனர்.